Latestமலேசியா

ஜூன் 29 முதல் ‘LRT3 ஷா ஆலாம்’ இரயில் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்

கோலாலம்பூர், ஜூன்-23-பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘LRT3 ஷா ஆலாம்’ இரயில் சேவை, வரும் ஜூன் 29-ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

​இச்சேவையை, அதற்கு முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பார் என, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

37.8​ கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த இரயில் பாதை, பண்டார் உத்தாமாவையும் கிள்ளான், ஜோஹான் செத்தியாவையும் (Johan Setia) இணைக்கிறது.

பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 20 இரயில் நிலையங்கள் இதில் செயல்படவுள்ளன.

பண்டார் உத்தாமா, ஷா ஆலாம் ஸ்டேடியம், UiTM ஷா ஆலாம் மற்றும் பசார் கிள்ளான் ஆகியவை முக்கிய நிறுத்தங்களாகும்.

​மற்றொரு நிலவரத்தில், TBS முனையத்தில் புதிய வட்டார JPJ அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இது பொது மக்கள் வசதிக்காக தினமும் இரவு 10 மணி வரை செயல்படும் என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!