Latestஉலகம்

கத்தாரில் எரிவாயு விநியோக நிலையத்தில் வெடிப்பு: 13 பேர் உயிரிழப்பு, 66 பேர் காயம்

தோஹா, ஜூன்-23 – கத்தாரின் தொழிற்புரி நகரமான Ras Laffan பகுதியில் உள்ள Barzan எரிவாயு விநியோக நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததுடன், 66 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்த 13 பேரும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்த 66 பேரில் கத்தார் குடிமக்கள் உட்பட ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை தற்போது நிலையாக இருப்பதாகவும் கத்தாரின் எரிசக்தித் துறை அமைச்சர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட இந்த வெடிப்பு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்ததாக கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் எந்தவொரு இராணுவத் நடவடிக்கை அல்லது நாசவேலை நடவடிக்கையுடனும் தொடர்புடையதல்ல என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 2025 முதல் மூடப்பட்டிருந்த இந்த நிலையம், வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!