Latestமலேசியா

10 வயது முதல் சகோதரியை 6 ஆண்டு காலம் கற்பழித்து வந்த இளைஞன் கைது

கோலாத் திரெங்கானு, ஜூன் 23 – 10 வயது சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே, சுமார் ஆறு ஆண்டு காலம் தனது சகோதரனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டதாக இளம் பெண் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அவளது சகோதரனை போலீசார் கைது செய்தனர்.

திங்கட்கிழமை மதியம் மணி 12:51 க்கு அப்பெண் செய்த புகாரைத் தொடர்ந்து 24 வயதான அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அஸ்லி முகமட் நோர் ( Azli Mohd Noor ) தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் வீட்டில் இருந்தபோது, ​​தற்போது 16 வயதாகும் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தேக நபர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (3)-ன் கீழ் ஒரு விசாரணை ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்படக்கூடிய 2017 ஆம் ஆண்டின் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14 (d)-ன் கீழும் இந்த விவகாகரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அஸ்லி முகமட் கூறினார்.

அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞரிடம் சமர்ப்பிப்பதற்காக விசாரணை ஆவணத்தை நிறைவு செய்யும் பணியில் போலீஸ் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!