
சென்னை, ஏப்ரல்-23-தமிழகத்தில் இன்று காலைத் தொடங்கி நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக பலர் வாக்களிக்க முடியாமல் தவித்ததாகக் கூறிக் கொண்டார்.
பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமம் அனுபவித்ததாகவும் அவர் சொன்னர்.
இதனால், அனைவருக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்க, குறைந்தது இரண்டு மணி நேரம் அதாவது இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை.
இதனிடையே, முதல்வர் கனவோடு தேர்தலில் களமிறங்கியுள்ள முன்னதாக சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார்.
234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடக்கிறது.



