
கோலாலாம்பூர், அக்டோபர்-14,
KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சின் அமைச்சர் ங்கா கோர் மிங், தீபாவளியை முன்னிட்டு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு RM30,000 நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார்.
50 இந்திய கிராமங்களில் 87 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு RM15 மில்லியன் ஒதுக்கீட்டை அறிவித்த அதே நாளில், இந்தியச் சமூகத்தை ஆதரிப்பதற்கான மற்றொரு முயற்சியாக, இந்த நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை தலைநகரில் உள்ள ஓர் உணவகத்தில் தமிழ் ஊடகங்களுடன் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பின் போது அவ்வறிவிப்பை அவர் வெளியிட்டார்.
INSERT AUDIO
முன்னதாக, மடானி அரசாங்கத்தின் ஒற்றுமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான கடப்பாட்டின் அடையாளமாக KPKT அமைச்சு, புத்ராஜெயாவில் தீபாவளியை பிரமாண்டமாக கொண்டாடியது.