Latestமலேசியா

தாயுடன் ஏற்பட்ட தகராறு; தாய்லாந்து பல்கலைக்கழக நீச்சல் குளத்திற்குள் SUVவாகனத்தை பாய்ச்சிய ஆடவர்

பேங்கோக், ஜூன் 19 – தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர், வீட்டு வாடகை செலுத்துவதற்கு தனது தாய் பண உதவி வழங்க மறுத்ததால், கோபத்தில் SUV வாகனத்தை பல்கலைக்கழகத்தின் நீச்சல் குளத்திற்குள் பாய்ச்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் போது, வெள்ளை நிற SUV வாகனமொன்று பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு நேரடியாக நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தது.

இந்தச் சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!