Latestமலேசியா

தித்திவங்சா MRT அருகே மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து ஆடவர் பலி

கோலாலம்பூர், பிப்ரவரி-27-கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தித்திவங்சா MRT நிலையமருகே, நேற்று காலை மேம்பால நடைபாதையிலிருந்து விழுந்து 47 வயது ஆடவர் உயிரிழந்தார்.

இறந்தவர், நெகிரி செம்பிலான், குவாலா பிலாவைச் சேர்ந்த Ariffin Sulaiman என அடையாளம் கூறப்பட்டது.

காலை 8 மணியளவில் தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புத் துறை, மேம்பாலத்திற்கு கீழ் ஒருக்களித்த நிலையில் சடலத்தை கண்டது.

தலை, கைகள் மற்றும் கை முட்டியில் காயங்கள் இருந்ததும் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

மரணத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை; எனவே தற்போதைக்கு இது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் கூறியது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!