Latestமலேசியா

திரெங்கானுவில் நண்பரின் ஏடிஎம் அட்டையை பயன்படுத்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு

திரெங்கானு, செப்டம்பர் 21 – நண்பருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டையை முறைகேடாகப் பயன்படுத்திய 25 வயதான கஃபே ஊழியர் ஒருவர் இன்று பெசுட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த வாரம் ஃபெல்டா தெனாங் (FELDA Tenang) பகுதியிலுள்ள ஒரு மளிகைக் கடையில் அந்த ஏடிஎம் அட்டையை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர் குற்றச்சாட்டை மறுத்து, தான் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் கீழ் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

நீதிமன்றம் 1,500 ரிங்கிட் பிணைத்தொகையை ஒரு உத்தரவாததாரருடன் நிர்ணயித்து, வழக்கை மீண்டும் அக்டோபர் 21ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!