
சென்னை, மே-6-சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனரும், மூத்த தயாரிப்பாளருமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்துள்ளார்.
தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த கோர கார் விபத்தில் அவர் உயிரிழந்தார்.
பிரபல நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷின் தந்தையான ஆர்.பி. சௌத்ரி, தென்னிந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமை ஆவார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்து, பல முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.
இவரது மறைவுக்கு, ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
‘நாட்டாமை’, ‘சூர்யவம்சம்’, ‘ஆனந்தம்’, ‘பூவே உனக்காக’ போன்ற குடும்பப் பாங்கான வெற்றிப் படங்களைத் தந்த ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது வேதனையைப் பகிர்ந்து வருகின்றனர்.



