Latestமலேசியா

திவால் நிலையிலிருந்து 36 நாட்களுக்கும் குறைவான காலத்தில் விடுவிக்க அரசாங்கம் இலக்கு; அஸாலீனா தகவல்

கோலாலம்பூர், அக்டோபர்-27,திவால் நிலையில் உள்ள தகுதியான நபர்களை, அடுத்தாண்டு முதல் 36 நாட்களுக்கும் குறைவான காலத்தில் அதிலிருந்து விடுவிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலீனா ஒத்மான் சைட் இதனைத் தெரிவித்துள்ளார்.

மலேசிய திவால் துறை வாயிலாக, விரைவான விடுவிப்புத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மக்களவையில் கூறினார்.

நடப்பில், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்திச் செய்யப்பட்டு, ஆட்சேபனைகள் ஏதும் இல்லாத பட்சத்தில், 36 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அரசாங்கத்தின் இரண்டாவது வாய்ப்புக் கொள்கையின் கீழ், 2023 முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை 253,457 பேர் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தனித்து வாழும் பெற்றோர், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கடனாளிகள், மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் வீடு வாங்கியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அஸாலீனா தெரிவித்தார்.

திவால் நிலையிலிருந்து விடுவிப்பதற்கான விண்ணப்பங்களை e-Insolvensi இணையத் தளம் வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!