கோத்தா பாரு, மே 20 – கோத்தா பாரு Kampung Pauh- வில் நேற்றிரவு ஒரு வீடு தீயில் அழிந்ததில் அவ்வீட்டிலிருந்த அறுவர் அனைத்து உடமைகளையும் இழந்தனர். இச்சம்பவம் நிகழ்ந்தபோது தாமும் , தனது மனைவி Norhayati Abdullah, மற்றும் நான்கு வயது முதல் 16 வயதுடைய நான்கு பிள்ளைகளுடன் Pengkala Chepa- வில் பொருட்களை வாங்கச் சென்றதால் வீட்டில் எவரும் இல்லையென 43 வயதுடைய Mohd Azizi Idris வேதனையோடு தெரிவித்தார். 10 நிமிடங்களுக்கு பின் தனது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக அருகே குடியிருக்கும் தனது சகோதரர் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததால் உடனடியாக வீடு திரும்பினோம். தீ வேகமாக கொழுந்துவிட்டு எரிந்ததால் எந்த பொருட்களையும் எங்களால் மீட்க முடியவில்லை. ஆனால் உயிர் பிழைத்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறோம் என Mohd Azizi கூறினார்.
பிள்ளைகள் சேமித்து வைத்திருந்த 3,500 ரிங்கிட் அழிந்ததோடு அவர்களது பள்ளிப் புத்தகங்களும் அழிந்ததாகவும் சுமார் 50,000 ரிங்கிட் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக Mohd Azizi தெரிவித்தார். E- Kasih உதவியை பயன்படுத்தி கடந்த ஆண்டு ஆகஸ் மாதம் பழுதுபார்க்கப்பட்ட அந்த வீடு முற்றிலும் அழிந்விட்டதால் தாங்கள் அனைவரும் உறவினரின் வீட்டில் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.