Latestமலேசியா

தொழில் உதவி தேவையா? ‘நாடி’ மையங்களை நாடுங்கள் – அமைச்சர் ஸ்டீவன் சிம் அழைப்பு

புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட்-23 – வணிகக் கடன், உரிமங்கள் அல்லது அரசாங்க உதவித் திட்டங்கள் தேவைப்படும் தொழில்முனைவோர், மக்கள் பிரதிநிதிகளை அணுகுவதற்குப் பதிலாக தங்களுக்கு அருகிலுள்ள ‘நாடி’ (Nadi) மையங்களை நாடலாம் என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

​நாடு முழுவதும் உள்ள 222 நாடி மையங்களில், சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான PRIME எனும் புதிய ஒருங்கிணைந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

​பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைவதைத் தவிர்த்து, நிதி உதவி, தொழில் உரிமம், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் பயிற்சிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் பெற அங்கு சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கூறினார்.

​தேசிய தொழில்முனைவோர் கழகம் INSKEN மற்றும் மலேசியத் தொடர்பு- பல்லூடக ஆணையம் MCMC ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

​இவ்வாண்டு இறுதிக்குள் 30,000 முதல் 50,000 வரையிலான தொழில்முனைவோர் இந்த PRIME சேவையின் மூலம் பயனடைவார்கள் என அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!