
கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 – சரவாக், சிலாங்கூர், கெடா மற்றும் பினாங்கு ஆகிய நான்கு மாநிலங்களில் இன்று காலை நிலவரத்தின் படி காற்றுத் தரக் குறியீடான IPU ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
சரவாக்கில் அதிகமான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. செரியான் 188 என்ற அதிகபட்ச IPU பதிவைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து கூச்சிங் (Kuching) 175, சமரஹான் (Samarahan) 169, ஸ்ரீ அமான் (Sri Aman) 158 மற்றும் பிந்துலு (Bintulu) 108 என பதிவாகியுள்ளன.
சிலாங்கூரில் ஜொகான் செத்தியா (Johan Setia) 161, குவாலா சிலாங்கூர் (Kuala Selangor) 128, கெடாவில் சுங்கை பட்டாணி 155, அலோர் ஸ்டார் 145, பினாங்கில் 134 என IPU பதிவாகியுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் 58 பகுதிகளில் காற்றுத் தரம் மிதமான நிலையில் காணப்பட்டது. நல்லது, மிகவும் ஆரோக்கியமற்றது அல்லது ஆபத்தான நிலையில் எந்தப் பகுதியும் பதிவாகவில்லை.
மலேசிய சுற்றுச்சூழல் துறை (JAS), நாடு முழுவதுமுள்ள 68 கண்காணிப்பு நிலையங்கள் மூலம் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. IPU தொடர்பான தரவுகள் ஒவ்வொரு மணி நேரமும் புதுப்பிக்கப்படுகின்றன.



