Latestமலேசியா

நாயை அடித்த வழக்கு: இருவருக்கு தலா RM30,000 அபராதம்

ஜார்ஜ் டவுன், ஜூன் 11 – கடந்த 2023-ல் பினாங்கு மாநிலத்தில் நாயை அடித்து துன்புறுத்திய குற்றத்தில் தொடர்புடைய இருவருக்கு, உயர் நீதிமன்றம் தலா 30,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

முன்னதாக விதிக்கப்பட்ட 50,000 ரிங்கிட் அபராதத்தை நீதிமன்றம் 30,000 ரிங்கிட்டாக குறைத்தாலும், குற்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது. அபராதம் செலுத்தத் தவறினால், இருவரும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும் கூறப்பட்டது.

இந்த சம்பவம் 2023 ஜூலை 8 ஆம் தேதியன்று கம்போங் தெலுக் தெம்போயாக் (Kampung Teluk Tempoyak) பகுதியில் நடந்தது. நாயை அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதே வேளை, வீடியோ சாட்சி மற்றும் காவல்துறை விசாரணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டையும் நீதிமன்றம் நிராகரித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!