
நியூசிலாந்து, நவம்பர் 26 – நியூசிலாந்தில் தனது இரு மகன்களுக்கு விஷ மருந்து கொடுத்து கொன்று, அவர்களின் சடலங்களை பைகளில் போட்டு மறைத்து வைத்த குற்றத்தில் கைதான பெண்ணொருவருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது.
அவர்களின் சடலங்கள் 2022-ஆம் ஆண்டு போலீசாரால் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றம் சாட்டப்பட்ட அப்பெண் மனநலக்குறைவால் அக்குற்றத்தைச் செய்ததாகவும் கொலையை செய்து விட்டு தலைமறைவாக வெளிநாட்டிற்கு ஓடிவிட்டார் என்றும் அதிகாரிகள் கூறினார்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது அம்மாது எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தவில்லை என்றும் அவரது செயலை கண்டித்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.



