Latestமலேசியா

நிர்வாகச் சீர்திருத்தங்களை நிறைவேற்றியது HRD Corp; கண்காணிப்பை முடித்தது MACC

மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்து நிர்வாகச் சீர்திருத்தப் பரிந்துரைகளையும் செயல்படுத்தியுள்ளது. இதையடுத்து, அக்கழகம் மீதான தனது கண்காணிப்பை முடித்துக்கொண்டதாக அக்டோபர் 26ஆம் தேதி வெளியிட்ட கடிதத்தில் MACC அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மனிதவள அமைச்சின் (KESUMA) கீழ் செயல்படும் அக்கழகத்தின் தலைவர் டத்தோ ருஸ்லி ஜாஃபார், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் ஆதரவு, கழகத் தலைமைத்துவத்தின் முயற்சி மற்றும் MACC-யின் ஒத்துழைப்பால் இந்தச் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.

தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஷமீர் அசீஸ் தலைமையில், நேர்மை, பொறுப்புடைமை மற்றும் சிறந்த நிர்வாகத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி, நாட்டின் மனிதவள மேம்பாட்டை முன்னெடுக்க HRD Corp உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மனிதவள மேம்பாட்டு நிதியை நிர்வகிக்கும் HRD Corp, தொழிலாளர்களுக்குப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், நாட்டின் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!