
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 25 தொகுதிகளைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் புதிய மாநில அரசாங்கத்தை அமைக்கிறது.
PH வெறும் 11 இடங்களை மட்டுமே வென்று ஆட்சியை இழந்துள்ளது.
என்றாலும், கடந்த 8 ஆண்டுகளாக பக்காத்தான் ஹராப்பான் (PH) அரசு அங்கு நல்லாட்சி, அரசியல் நிலைத்தன்மை மற்றும் பல மேம்பாட்டுத் திட்டங்களை வழங்கிச் சிறப்பான நிர்வாகப் பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய நிர்வாகமும் மக்களின் நலனுக்காக அதே நல்ல செயல்பாடுகளைத் தொடரும் என, PH தலைவருமான அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
புதிய நெகிரி செம்பிலான் மாநில அரசின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் மத்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பிரதமர் அன்வார் உறுதியளித்துள்ளார்.
ஜோகூரைத் தொடர்ந்து நெகிரியிலும் வீசிய பாரிசானின் நீல அலையில், டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண், அந்தோணி லோக் போன்ற முக்கியத் தலைகளும் தோல்விக் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



