Latestமலேசியா

நேப்பாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களில் ஒருவர் 37 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்

கோலாலம்பூர், அக்-2–நேப்பாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாமல் போன 55 மலேசியர்களில் ஒருவர் பாதுகாப்பாகக் கண்டறியப்பட்டு குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளார்.

அந்நபர் நேற்று காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்தைச் சென்றடைந்ததை அடுத்து, வெளியுறவு அமைச்சு இன்று அவரின் குடும்பத்தினருக்கு அத்தகவலை உறுதிப்படுத்தியது. அவர் இன்று காலை மலேசியா வந்தடைந்து குடும்பத்தினருடன் இணைந்ததாக Malaysia Solidarity: Families in Hope எனும் MASFIH அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்தார்.

அவ்வாடவர் தனியாகப் பயணம் செய்த நிலையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதி Nagthali பகுதியில் இருந்துள்ளார். வெள்ளத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து, மின்சாரம், குடிநீர் மற்றும் WiFi வசதிகள் இல்லாததால் அவர் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்துள்ளார். பின்னர் தமது முயற்சியால் அவர் மலேசியத் தூதரகத்தைச் சென்றடைந்ததாக மணிவண்ணன் கூறினார்.

நேப்பாளத்தின் Rasuwa மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து 55 மலேசியர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இந்நிலையில் 37 நாட்களுக்குப் பிறகு ஒருவர் பாதுகாப்பாகத் திரும்பியிருப்பது மற்றவர்களையும் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!