Latestஉலகம்

நேப்பாளத்தில் அதிசய மீட்பு: வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கத்திலிருந்து 9 நாட்களுக்குப் பின் 2 ஊழியர்கள் உயிருடன் மீட்பு

காட்மண்டு, செப்டம்பர்-5,நேப்பாளத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, திரிசூலி 3A (Trishuli 3A) நீர்மின் நிலைய சுரங்கப்பாதைக்குள் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்த 2 ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

​அனைத்துலகச் சுரங்கப்பாதை மீட்பு நிபுணர் Arnold Dix இந்த சவாலான பணியை “இதுவரை கண்டிராத” மிகச் சிக்கலான மீட்பு நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதையை மறித்துக் கொண்டிருந்த கார் அளவிலான மிகப்பெரிய பாறைகளை வெடிவைத்துத் தகர்த்தும், அகழ்வாராய்ச்சி இயந்திரங்களைப் பயன்படுத்தியும், சுவாசிப்பதற்குத் தேவையான தூய்மையான காற்றைச் சுரங்கத்திற்குள் செலுத்தியும் மீட்புக் குழுவினர் இந்தச் சாதனையைச் செய்துள்ளனர்.

​சுரங்கப்பாதைக்குள் போதிய காற்றும் பாதுகாப்பும் கொண்ட சில பகுதிகள் இருந்ததால், காரிருளிலும் அவர்கள் இத்தனை நாட்கள் உயிர் பிழைக்க முடிந்துள்ளது.

​இந்த நீர்மின் நிலையத்தில் இன்னும் 35-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!