Latestமலேசியா

பக்காத்தானில் மலாய் முஸ்லீம்கள் இல்லையா? கைரிக்கு ஃபாஹ்மி கண்டனம்

ஜெம்போல், ஜூலை-21 – “உங்கள் கண்களுக்கு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் மலாய் முஸ்லீம்களே தெரியவில்லையா?” என, அம்னோ இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடினுக்கு டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

​நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அமைத்துள்ளதை சுட்டிக்காட்டிய கைரி, மலாய்க்காரர் விவகாரங்களில் ஆளும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.

​இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தொடர்புத் துறை அமைச்சருமான ஃபாஹ்மி, மலாய் மற்றும் இஸ்லாமியர்களின் நலன்களைப் பாதுகாக்க தங்களுக்குத் தகுதி உண்டு என்றார்.

“பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்படப் பல முன்னணி தலைவர்கள் மலாய் முஸ்லீம்கள்தான் என்பதை கைரி அறியவில்லையா?” என்றும் ஃபாஹ்மி கேள்வி எழுப்பினார்.

நீண்ட நாட்களாக ஒதுங்கியிருந்து மீண்டும் அம்னோ​அரசியல் களத்திற்குத் திரும்பியிருக்கும் கைரி, அங்கு காலூன்றவே இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து கவனம் ஈர்ப்பதாக ஃபாஹ்மி சாடினார்.

ஒற்றுமை அரசாங்க கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான இந்த அரசியல் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!