Latestமலேசியா

பண்டார் உதாமா மாணவி கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட மாணவரின் குடும்பத்தில் மனநலப் பாதிப்பு வரலாறு!

ஷா ஆலாம், செப்- 23-கடந்தாண்டு சிலாங்கூர், Bandar Utama பள்ளியில் 16 வயது மாணவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தந்தை வழிக் குடும்பத்தில் மனநலப் பாதிப்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது.

அம்மாணவனின் தந்தை வழி அத்தை மனநலப் பாதிப்பால் சிகிச்சை பெற்றதுடன், அவரது இரு மகன்களும் அதே பாதிப்பைக் கொண்டிருந்ததாக ஷா ஆலாம் உயர் நீதிமன்ற நீதிபதி Adlin Abdul Majid தெரிவித்தார். அதே சமயம் அம்மாணவனின் மூத்த சகோதரியும் சில மனநல பாதிப்பால் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

அம்மாணவன் தனது ஏழாவது வயதிலேயே வீடியோ விளையாட்டுகளை விளையாடத் தொடங்கியதும், பின்னர் அதில் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வரை செலவிட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. அம்மாணவன் பார்த்த மற்றும் விளையாடிய சில உள்ளடக்கங்களில் வன்முறை, கொலை, பின்தொடர்தல், பாலியல் மற்றும் துன்புறுத்தல் போன்ற அம்சங்கள் இருந்ததாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நீதிமன்றம் அம்மாணவனை கொலைக் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்தது. கடந்தாண்டு அக்டோபர் 14 ஆம் தேதி 16 வயது மாணவியைக் குத்திக் கொலை செய்த போது அம்மாணவன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!