Latestமலேசியா

பஹாங் கிளாவ் அணையில் பிரானா மீன்கள் சிக்கவில்லை – மீன்வளத் துறை

பஹாங், அக்டோபர் 26 – பஹாங் ரவுப் (Raub) பகுதியிலுள்ள கிளாவ் அணையில் (Empangan Klau) இரண்டு நாட்களாக நடைபெற்ற மீன்பிடி நடவடிக்கையில் பிரானா மீன்கள் எதுவும் சிக்கவில்லை என மீன்வளத் துறை தலைமை இயக்குநர் டத்தோ அட்னான் ஹுசைன் (Datuk Adnan Hussain) தெரிவித்தார்.

இருப்பினும், பிரானா மீன்கள் எதுவும் சிக்காததால் அந்த அணையில் அவை இல்லை என்று உறுதியாகக் கூற முடியாது என்றும், தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அணையில் உள்ள நீரைப் பரிசோதித்து, பிரானா மீன்களின் மரபணுத் தடயங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு முடிந்த பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

இந்த நடவடிக்கையில் 150 பேர் பங்கேற்றனர். அதில் மயில் பாஸ் (Peacock Bass), வரிக்கோடு திலாப்பியா (Tilapia Zebra), ஜாவா லாம்பம் (Lampam Jawa) ஆகிய வெளிநாட்டு மீன் வகைகள் உட்பட மொத்தம் 156.6 கிலோகிராம் மீன்கள் பிடிக்கப்பட்டன.

வெளிநாட்டு மீன்களின் எண்ணிக்கையைக் குறைத்து, உள்ளூர் மீன் இனங்களையும் நீர்வாழ் சூழலையும் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!