Latestமலேசியா

பஹாங்கில் மூவர் உயிரிழந்த விபத்து: அலட்சியமாக வாகனம் ஓட்டியதாக ஆடவர் மீது வழக்கு

பஹாங் , ஆகஸ்ட் 3 – கடந்த ஜூன் மாதம் குவாந்தான்–சிகாமாட் சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் மருத்துவர் ஒருவரும், அவரது 2 வயது மகளும், மேலும் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 31 வயதான சந்தேக நபர் மீது அலட்சியமாக வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக இன்று பஹாங் பெக்கான் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் அந்நபர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். அவர் ஓட்டிய வாகனம் அலட்சியமாக இயக்கப்பட்டதால் அம்மூவரும் உயிரிழந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 20,000 முதல் RM50,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

நீதிமன்றம் 7,000 ரிங்கிட் ஜாமீனில் அவரை விடுவித்ததுடன், வழக்கு முடியும் வரை அவரது ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்தவும், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகவும் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!