பாலோ ஸ்ரீ சக்தி வேல் முருகன் ஆலயத்தின் 10 ஆண்டுகால நிலப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு; அங்கீகாரக் கடிதம் ஒப்படைப்பு

பாலோ, மே-24,
ஜோகூர், பாலோவில் உள்ள ‘ஸ்ரீ சக்தி வேல் முருகன் ஆலயத்தின்’ நீண்டகால நிலப் பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கான நில ஒதுக்கீட்டு அங்கீகாரக் கடிதத்தை, ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்களான ரவின் குமார் கிருஷ்ணசாமி மற்றும் Lee Ting Han ஆகியோர் ஆலய நிர்வாகத்திடம் நேரில் ஒப்படைத்தனர்.
தேசிய நிலச் சட்டத்தின் கீழ், பிற சமய வழிபாட்டுத் தலங்களுக்கான நில ஒதுக்கீட்டின்படி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நில விவகாரம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தள்ளிப்போன ஒரு சூழலில், தற்போது இப்பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாகத்தினரின் நீண்டகாலப் பொறுமைக்கும் விடாமுயற்சிக்கும் பாராட்டுத் தெரிவித்த ரவின் குமார், இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசிக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நடவடிக்கை, ஜோகூர் மக்களின் பல்லினப் பண்பாட்டையும் சமய நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.



