Latestமலேசியா

பினாங்கு ஆயர் ஈத்தாம் அடுக்குமாடிக் குடியிருப்பு மின்தூக்கியில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு; முதியவருக்கு RM4,000 அபராதம்

ஜார்ஜ்டவுன், செப்-24-பினாங்கு, Air Itamமில் 16 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 4,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. அந்த 85 வயது முதியவர் தம் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 4 மணியளவில் Tingkat Paya Terubong ங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் மின்தூக்கியில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 354-ன் கீழ் அம்முதியவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டப்பட்டது.

இதனிடையே, அவருக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு குறைந்த தண்டனை விதிக்குமாறு கோரப்பட்டது.

விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி மீண்டும் குற்றம் செய்யப் போவதில்லை என அம்முதியவர் உறுதியளித்ததை அடுத்து இறுதியில் 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அத்தொகை அவரது சார்பில் பின்னர் கட்டப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!