
கோலாலம்பூர், ஜூன்-20 – கோலாலம்பூர் புடுவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் குடிநுழைவு இலாகா அதிகாரிகள் நேற்று நள்ளிரவு Ops Kutip எனும் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.
பொது மக்கள் அளித்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், மொத்தம் 186 கள்ளக்குடியேறிகள் அதிரடியாகக் கைதுச் செய்யப்பட்டனர்.
கைதுச் செய்யப்பட்டவர்களில் முறையான பயண ஆவணங்கள் இல்லாதவர்கள் மற்றும் தங்களின் விசா காலத்தை மீறி தங்கியிருந்தவர்களும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிடிபட்ட அனைவரும் மேல் விசாரணைக்காகவும், குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அடுத்தகட்ட நடவடிக்கைக்காகவும் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத வெளிநாட்டினருக்கு எதிரான இத்தகைய கடுமையான சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என குடிநுழைவு இலாகா எச்சரித்துள்ளது.



