Latestஉலகம்

புதிய வரலாறு; 400 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பைத் தொட்ட கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்

நியூ ஜெர்சி, டிசம்பர்-13, தெஸ்லா தலைமை செயலதிகாரி இலோன் மாஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு நேற்று 400 பில்லியன் டாலரைத் தாண்டி புதிய வரலாறு படைத்தது.

உலகக் கோடீஸ்வரர்களில் இதுவரை எவரும் தொட்டிராத உச்சம் அது.

உலகக் புகழ்பெற்ற Forbes சஞ்சிகையின் real-time எனப்படும் நிகழ் நேர கோடீஸ்வரர்கள் பட்டியலில் அது தெரிய வந்துள்ளது.

அந்த மின்சார வாகன உற்பத்தி கோடீஸ்வரரின் பங்குகள் இவ்வாண்டு 71 விழுக்காடு உயர்வு கண்டுள்ளதும், அவரின் SpaceX ராக்கெட் நிறுவனத்தின் கணிசமான மதிப்புயர்வும் அதனைச் சாத்தியமாக்கியுள்ளன.

இலோன் மாஸ்க், 13 விழுக்காட்டு பங்குகளுடன் தெஸ்லாவின் மிகப் பெரியப் பங்குத்தாரர் ஆவார்.

நவம்பர் 5 அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கி ஏற்றம் கண்டு வந்த தெஸ்லாவின் பங்குகள், நேற்று புதிய உச்சமாக 424.9 டாலரை எட்டி பரபரப்பை ஏற்படுத்தின.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல் டிரம்பின் பிரச்சார பீரங்கியாக இலோன் மாஸ்க் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

விண்வெளித் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் SpaceX நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மத்தியிலேயே பங்கு விற்பனை 1.25 பில்லியன் டாலரை எட்டியிருப்பதும், இலோன் மாஸ்கின் சொத்து மதிப்பு அதிரடி உயர்வுக்கு உதவியுள்ளது.

டிரம்பின் வெற்றிக்காக கால் பில்லியன் டாலர் பணத்தை வாரி இறைத்தவரான இலோன் மாஸ்க், பிரபல சமூக ஊடகமான X தளம் மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான நிறுவனமான The Boring Company-க்கும் சொந்தக்காரராக உள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!