Latestஇந்தியா

புரட்டாசி, தொடர் விடுமுறையால் திருப்பதியில் நெரிசல்; தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

திருப்பதி, அக்டோபர்-4 – புரட்டாசி மாதத்தின் முக்கியச் சனிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

குறிப்பாக ​இலவச தரிசனமான தர்ம தரிசனத்திற்காக பக்தர்கள் சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பக்தர்களின் வரிசை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டுகொண்டே செல்கிறது.

​தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஒரே நாளில் மட்டும் சுமார் 78,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

கடும் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து ஏற்பாடு செய்து வருகின்றனர்.

​தொடர் விடுமுறை நீடிப்பதால், பக்தர்கள் கூடுதல் காத்திருப்பு நேரத்தை மனதில் கொண்டு திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!