
பூச்சோங், ஆகஸ்ட்- 27,இந்தியத் தொழில்முனைவோர் மற்றும் சிறு, நடுத்தர வணிகங்களை வலுவூட்டும் வகையில், ‘இந்தியச் சமூகத்திற்கான வணிக நிதியுதவித் திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம்’ வரும் சனிக்கிழமை, ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
14-ஆவது மைல், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பூச்சோங் மாநாட்டு மையத்தில், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இந்தியத் தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு அரசு நிதியுதவித் திட்டங்கள், வணிக நிதி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்த நேரடித் தகவல்களையும் வழிகாட்டல்களையும் வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்வில் அமானா இக்தியார் மலேசியா (AIM), பேங்க் ராக்யாட், தெக்குன் நேஷனல் மற்றும் SME வங்கி ஆகிய நிதி நிறுவனங்கள் கலந்துகொண்டு, நேரடி ஆலோசனைகளையும் விண்ணப்ப வழிகாட்டல்களையும் இலவசமாக வழங்கவுள்ளன.
அனுமதி இலவசமாகும்.
கூடுதல் விவரங்களுக்கு 016-271 2241 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



