
செமஞே, ஆகஸ்ட்-27,சிலாங்கூர், செமஞே Vista Valley பகுதியில் உள்ள பேரங்காடிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் 48 வயது ஆடவரும், 43 வயது பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நண்பர்களான அவ்விருவரும் கடந்த சில நாட்களாக வீடு திரும்பாமலும், தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த நிலையில் காரின் முன் இருக்கைகளில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காஜாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ACP நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
வாகனத்தில் எவ்வித உடைப்புகளோ அல்லது உடல்களில் காயங்களோ இல்லாத நிலையில், குற்றவியல் கூறுகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றார் அவர்.
எனவே, இச்சம்பவம் தற்போதைக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
காஜாங் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனை மற்றும் ஆய்வுக் கூட முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக நாஸ்ரோன் மேலும் கூறினார்.



