Latestமலேசியா

பூமியின் கடல் நீர் வெப்பநிலை 125,000 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது; நிபுணர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஆகஸ்ட்-27,உலகப் பெருங்கடல்களின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 125,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகப் பருவநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

​தீவிரமடைந்துள்ள ‘எல் நினோ’ தாக்கம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாகக் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாக 21 பாகை செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

வழக்கமான மார்ச், ஏப்ரல் மாதங்களைத் தாண்டியும் இந்த வெப்பம் நீடித்து வருகிறது.

​ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus பருவநிலை மாற்ற சேவை மற்றும் NOAA அமைப்பின் தரவுகளின்படி, 1990-களுக்குப் பிறகு கடல் வெப்ப அலைகள் 3 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

அதோடு, உலகின் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான பெருங்கடல்கள் தீவிர வெப்ப அலைகளின் பிடியில் உள்ளன.

இப்படி ​பெருங்கடல்கள் அதிகளவில் வெப்பமடைவது வளிமண்டலக் கரியமில வாயுவை உறிஞ்சும் திறனைக் குறைப்பதுடன், தீவிரப் புயல்கள் மற்றும் பெருவெள்ளம் போன்ற பேரிடர்களை உலகளவில் உருவாக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!