Latestமலேசியா

பேத்தி கற்பழிப்பு சந்தேகத்தின் பேரில் 67 வயது ஆடவன் தடுத்து வைப்பு

பத்து பஹாட், ஜூன்-10-கடந்த ஒரு ஆண்டு காலமாக தனது 13 வயது பேத்தியைக் கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும் 67 வயது ஆடவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

சம்பந்தப்பட் சந்தேக பேர்வழிக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் 376 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்துவதற்காக ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் ( Arun Noval Dass) பிறப்பித்தார்.

தனக்கு ஏற்பட்ட பாதிப்பை பாதிக்கப்பட்ட சிறுமி இரண்டு நாட்களுக்கு முன் தனது தாயிடம் விவரித்ததைத் தொடர்ந்து போலீஸ் புகாரைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

தனது பெற்றோர் மனவிலக்கு பெற்றதால் அந்த சிறுமி பத்து பஹாட் மாவாட்டத்திலுள்ள தனது தாத்தாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் அந்த சிறுமியை தம்முடன் வடமாநிலத்திற்கு அவரது தாயார் அழைத்துச் சென்றுவிட்டார்.

தனக்கு அறிமுகமானவருக்கு அந்த சிறுமி குறுஞ்செய்தி அனுப்பியதை அவரது தாயார் கண்டறிந்ததைத் தொடர்ந்து வற்புறுத்தியதால் இந்த விவகாரத்தை அவரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு தொடங்கி ஆகக்கடைசியாக டிசம்பர் மாதம் வரை அந்த சிறுமி தனது தாத்தாவின் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார் என விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!