
கோலாலம்பூர், மார்ச்-10-நாட்டில் அதிகரித்து வரும் இன மற்றும் மத உணர்ச்சி தூண்டுதல் சம்பவங்கள் குறித்து அரச மலேசியப் போலீஸ் படை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அன்மையக் காலமாக சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் சிலர் வெளியிடும் கருத்துகள் மற்றும் செயல்கள் சமூக ஒற்றுமையை பாதிக்கும் வகையில் இருப்பதால், கடும் நடவடிக்கை அவசியமென அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் கேட்டுக் கொண்டார்.
இத்தகையச் சம்பவங்களை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவற்றின் பின்னணியை முழுமையாக விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிச் செய்ய வேண்டுமென்றார் அவர்.
இத்தகைய தூண்டுதல் நடவடிக்கைகள் நாட்டின் அமைதி மற்றும் இன ஒற்றுமையை பாதிக்கக்கூடியதால், அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும்.
அதேவேளை, பொது மக்களும் எந்தவித யூகங்களையும் பரப்பாமல், சட்டத்தை மதித்து அமைதியை பேண வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.



