Latestமலேசியா

மன்னிப்பு கோரும் துணிவு: அன்வார் இப்ராஹிமின் உண்மையான தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகிறது – குணராஜ்

ஷா ஆலாம், ஜூலை.30- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இந்துக் கோவில்கள் தொடர்பில் நோக்கமில்லாமல் கூறிய கருத்துக்காக இந்திய சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளது ஒரு பெருந்தன்மையான தலைவரின் நேர்மையைக் காட்டுகிறது. அதே சமயம் அது மனப்பூர்வமானதன்மையையும் பொறுப்புணர்வையும் தெளிவாகப் பிரதிபலிப்பதாக சிலாங்கூர், Sentosa சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் கூறியிருக்கிறார்.

இத்தகைய மனப்பான்மை உண்மையிலேயே மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியது.
பல ஆண்டுகளாக Reformasi இயக்கத்திற்கு இந்திய சமூகம் அளித்த மகத்தான ஆதரவிற்கு தமது நன்றியைச் செலுத்தும் வகையில் பிரதமரின் செயல் உள்ளது என அவர் கூறினார்.

அன்வாரின் தலைமையின் கீழ், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் போது, ​​உரையாடல், கலந்தாலோசனை மற்றும் இணக்கமான தீர்வு ஆகியவற்றுக்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. Madani அரசாங்கத்தை வழிநடத்திய மூன்றாண்டு காலம் நெடுகிலும், மத்திய அரசு இந்து கோயில் எதனையும் இடிக்கவிக்லை. அதே சமயம் நாடு முழுவதும் உள்ள இந்து கோயில்கள் உட்பட, முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பிற்காக Madani அரசாங்கம் 200 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

எனவே, மன்னிப்பை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்தை முன்னேக்கிச் செல்லும் காலம் வந்து விட்டது. வெறும் அரசியல் சர்ச்சைகளின் அடிப்படையில் அல்லாமல், செயல்கள், கொள்கைகள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் தலைமைத்துவத்தை மதிப்பிட வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் செழிப்பான ஒரு மலேசியாவை உருவாக்குவதற்கான சிறந்த நம்பிக்கையாக Madani அரசு திகழ்வதையும் குணராஜ் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!