Latestமலேசியா

மருந்து தட்டுப்பாட்டைத் தடுக்க சிறப்புப் பணிக்குழு: சுகாதார அமைச்சு அறிவிப்பு

கோலாலம்பூர், மே-5-உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடிகளுக்கு மத்தியில், மலேசியாவின் மருந்து மற்றும் மருத்துவக் கருவிகளின் கையிருப்பை உறுதிச் செய்ய ஒரு புதிய சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக, மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன.

இந்தச் சவால்களை எதிர்கொள்ள ‘மருந்து மற்றும் மருத்துவக் சாதனப் பாதுகாப்புக்கான சிறப்புப் பணிக்குழு’ அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

​மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முக்கியமான மருந்துகளின் இருப்பு தற்போது 60 நாட்களுக்கு மேல் நீடிக்கும் வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருந்து தட்டுப்பாட்டை முன்கூட்டியே கண்டறியும் எச்சரிக்கை முறை ஒன்றும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், விநியோகிப்பாளர்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய மருந்து தட்டுப்பாடு குறித்து 6 மாதங்களுக்கு முன்னரே, அதாவது வரும் ஜூலைக்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

​சீனா போன்ற நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வியூக ஒப்பந்தங்கள் மூலம், மருத்துவக் கருவிகள் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களின் விநியோகம் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சொன்னார்.

எந்தவொரு சூழலிலும், மலேசிய நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் சுகாதாரக் கட்டமைப்பு தயார் நிலையில் இருப்பதாக சுல்கிஃப்ளி உறுதி அளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!