Latestமலேசியா

மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான்

மலாக்கா, அக்டோபர்-25,நவம்பர் 14 மலாக்கா மாநிலத் தேர்தலில், மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் 21 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடப் போவதாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அறிவித்துள்ளது.

அக்கூட்டணியின் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்றிரவு மலாக்கா ஹங் ஜெபாட் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த 21 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்.

அவ்வகையில், முன்னாள் முதல்வர் அட்லி சாஹாரி மீண்டும் புக்கிட் கட்டில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பிரதமரின் அரசியல் செயலாளர் அஸ்மான் அபிடின் (Azman Abidin) பாயா ரும்புட் தொகுதியிலும், ஜினி லிம் (Ginie Lim) மாச்சாப் ஜெயா தொகுதியிலும் களமிறங்குகின்றனர்.

Gadek-கில் K. ஜெகசீலனும், Asahan தொகுதியில் P. டெனேஷ் என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பெம்பான் உள்ளிட்ட எஞ்சிய 7 தொகுதிகளில் பக்காத்தான் போட்டியிடாதது, ஒருவேளை பெர்சாத்து கட்சியுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படக்கூடுமோ என்ற யூகங்களை எழுப்பியுள்ளது.

என்றாலும், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே தங்களின் நிலைப்பாடு என மலாக்கா பக்காத்தான் தலைமை தெரிவித்துள்ளது.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 31-ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்களிப்பு நவம்பர் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், பாரிசான் நேஷனல் 21 தொகுதிகளையும், பக்காத்தான் ஹராப்பான் 5 தொகுதிகளையும், பெரிக்காத்தான் நேஷனல் 2 தொகுதிகளையும் கைப்பற்றின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!