Latestமலேசியா

மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசான் நேஷனல் 21 வேட்பாளர்களை அறிவித்தது

மலாக்கா, அக்டோபர்-25,நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா சட்டமன்றத் தேர்தலுக்கு, ஆளும் பாரிசான் நேஷனல் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

முதல்வர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ, தஞ்சோங் பிடாரா தொகுதியிலும், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr முஹமட் அக்மால் சாலே, மெர்லிமாவ் தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

பாரிசான் வேட்பாளர் பட்டியலில் பல புதிய முகங்களும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, காடேக் தொகுதியில் ம.இ.காவைச் சேர்ந்த எஸ். நடராஜா போட்டியிடுகிறார்.

பாரிசான் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி முன்னிலையில், MITC எனப்படும் மலாக்கா அனைத்துலக வாணிப மையத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மொத்தம் 28 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மலாக்காவில், 21 தொகுதிகளில் மட்டுமே பாரிசான் போட்டியிடு நிலையில், ஒரு புரிந்துணர்வின் கீழ், எஞ்சிய 7 தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் போட்டியிட அது வழிவிட்டுள்ளது.

இத்தேர்தலுக்கு, அக்டோபர் 31-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும், நவம்பர் 10-ஆம் தேதி முன்கூட்டிய வாக்களிப்பும் நடைபெறவுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!