Latestமலேசியா

மலாக்காவில் 27,000 லிட்டர் டீசல் கடத்தல் முறியடிப்பு

மலாக்கா, மே 7 – மலாக்காவில் Krubong தொழில்மய பகுதியில் சட்டவிரோத கிடங்கிலிருந்து 27,000 liter diesel கடத்தும் முயற்சியை உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் மலாக்கா அதிகாரிகள் நேற்றிரவு முறியடித்தனர்.

அம்மாநிலத்தில் பல்வேறு இடங்களில் diesel கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்து கிடைக்கப்பெற்ற வேவு தகவல்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையை தொடர்ந்து அந்த கும்பல் முறியடிக்கப்பட்டதாக உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் மலாக்கா இயக்குநர் Norena Jaafar தெரிவித்தார்.

அதோடு diesel கடத்தல் கும்பலின் உறுப்பினர்கள் என நம்பப்படும் மூன்று ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் எண்ணெய் டேங்கர் கொள்கலன் லோரியின் ஓட்டுனர் மற்றும் கிடங்கின் இரண்டு தொழிலாளர்களான 30 முதல் 35 வயதுடைய இரு வங்காளதேச பிரஜைகளும் அடங்குவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!