மலாக்கா, ஜூன் 4 – மலாக்கா, லோரோங் ஹாங் ஜெபாட்டிலுள்ள, கடையின் கழிவறையில், பெண் ஒருவரை ஒளிப்பதிவுச் செய்ததாக சந்தேகிக்கப்படும் இந்தோனேசிய துப்புரவு பணியாளர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாலை மணி 4.16 வாக்கில், 24 வயதான பெண் ஒருவர், கடையின் முதல் மாடியிலுள்ள, கழிவறைக்கு சென்ற போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக, மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஜைனோல் சமா தெரிவித்தார்.
கழிவறைக்கு சென்றிருந்த அப்பெண், கால்சட்டையை அணிய முற்பட்ட போது, சுவரில் இருந்த ஓட்டை வழியாக கைப்பேசி ஒன்றை கண்டுள்ளார்.
அச்சம்பவம் தொடர்பில், உடனடியாக அப்பெண் செய்த புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளரின் கைப்பேசியை கடையின் நிர்வாகி சோதனையிட்டுள்ளார்.
அதில், அப்பெண்ணின் வீடியோ இருந்ததை அடுத்து, உடனடியாக அப்பெண் போலீஸ் புகார் செய்ததாக ஜைனோல் சொன்னார்.
அந்த புகாரின் அடிப்படையில் கைதுச் செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட இந்தோனேசிய ஆடவன், போதைப் பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டது.
அதனால், அவன் விசாரணைக்காக, நேற்று தொடங்கி நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.