
கோலாலாம்பூர், ஜூன்-6-தமிழ் மொழிக் கல்வியை நவீன தொழில்நுட்ப முறையில் உலகளவில் கொண்டு சேர்த்து வரும் ‘iPaatti அமைப்பின் ஏற்பாட்டில், இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் மலேசியாவின் முதல் தேசிய அளவிலான ‘சொற்கற்கள்’ போட்டி கோலாலம்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
பிரிக்ஃபீல்ட்ஸ் கந்தையா மண்டபத்தில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய இவ்விழாவில், மாணவர்களின் தமிழ் மொழி அறிவை மேம்படுத்தும் நோக்கில் நாட்டின் முதல் தேசிய அளவிலான தமிழ் ‘சொற்கற்கள்’ போட்டி நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, iPaatti அமைப்பின் ‘மாஸ்டர்கிளாஸ்’ பயிற்சியை நிறைவுச் செய்த இடைநிலைப்பள்ளி தமிழ் மாணவர்களின் ஏழு புத்தம் புதிய புத்தகங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அனைத்துலக அளவில் கல்வி வளங்களை உருவாக்கி வரும் iPaatti நிறுவனத்தின் இந்தத் தேசிய முயற்சி, அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு சேர்க்கும் பாலமாக அமைந்துள்ளது.
பின்னர் வணக்கம் மலேசியாவிடம் பேசிய iPaatti மலேசியா இயக்குநர் மனோஷ் ராமா, விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மூலம் அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு சேர்ப்பதே தங்களின் நோக்கம் என்றார்.
மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தம் இவர் பகிர்ந்து கொண்டார்.
பள்ளிகள், தங்களின் மாணவர் மேம்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு iPaatti-யுடன் இணைந்து செயல்படலாம் என நிகழ்ச்சி இயக்குநர் சங்கீதா சந்திரகுமரன் கூறினார்.
நிகழ்வின் சிறப்பம்சங்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்பு குறித்தும் சங்கீதா விளக்கமளித்தார்.
புத்தக எழுத்தாளர் Taya G, இளம் எழுத்தாளர்கள் குறித்தும், வெளியிடப்பட்ட புத்தகங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இளம் எழுத்தாளர்கள் சிலர், தங்களின் கற்பனைக் கதைகளை உலகறியச் செய்த iPaatti அமைப்புக் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, தங்களின் புத்தகங்கள் வெளியாகியிருப்பது குறித்தும் பெருமிதம் தெரிவித்தனர்.
இத்தகைய தமிழ் மேம்பாட்டுத் திட்டங்களை தங்கள் பள்ளிகளிலும் நடத்த விரும்பும் நிர்வாகங்கள், திரையில் தோன்றும் எண்ணில் iPaatti மலேசியாவைத் தொடர்பு கொள்ளலாம்.



