
பெரிக்காத்தான் நேஷனலில் அங்கம் வகிக்கும் MIPP கட்சியைத் தேசிய முன்னணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோ ஶ்ரீ அகமாட் சஹிட் ஹமிடி MIPP தலைவர் புனிதனை நேரடியாகச் சந்தித்ததாகவும் அப்போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரம் கூறியுள்ளது.
அச்சந்திப்பின் போது வேறு சில அம்னோ தலைவர்களும் உடன் இருந்துள்ளனர்.
வருகின்ற ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்களிலும் அடுத்து பொதுத் தேர்தலிலும் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்ய இந்தியர் வாக்குகள் மிக அவசியம்.
அவ்வகையில் அதிருப்தி வாக்குகள் குறிப்பாக இளையோர் வாக்குகள் பெரிக்காத்தான் நேஷனலுக்கு செல்லாமல் தேசிய முன்னணி பக்கமே முழுவதுமாய் ஒருங்கிணைக்க இந்த அரசியல் நகர்வு முன்னெடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
MIPP வர சம்மதித்தால் போட்டியிடுவதற்கான சில தொகுதிகளை வழங்கவும் வேறு சில நியமனப் பதவிகளை தரவும் தயார் என சஹிட் கூறியதாக அவ்வட்டாரம். தெரிவிக்கிறது.
இருப்பினும் ஏற்கனவே தேசிய முன்னணியில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் வகையில் பெரும் கட்சியாக ம.இ.கா உள்ளது. அதோடு அண்மையில் பிபிபி கட்சியும் மீண்டும் இணைந்தது.
இது தவிர தோழமை கட்சிகளாக மக்கள் சக்தி, ஐபிஃஎப் (IPF) உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.



