Latestஉலகம்சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு எதிரான 14 சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்

சிங்கப்பூர், ஜூன்-7-சிங்கப்பூரில் இந்தியச் சமூகத்துக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி, இன நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் பதிவிடப்பட்ட 14 சமூக ஊடகப் பதிவுகளை அந்நாட்டு அரசாங்கம் முடக்கியுள்ளது.

​Little India மற்றும் Pagoda Street)சமய திருவிழாக்களில் எடுக்கப்பட்ட மக்கள் கூட்ட நெரிசல் காட்சிகளைத் தவறாகப் பயன்படுத்தி, “சிங்கப்பூரை இந்தியர்கள் ஆக்கிரமித்துவிட்டனர்” என்ற தோற்றத்தை உருவாக்க இந்த பதிவுகள் முயன்றுள்ளன.

​இணையக் குற்றவியல் தீங்குகள் சட்டத்தின் கீழ், YouTube, Facebook மற்றும் X தளங்களுக்கு இப்பதிவுகளை முடக்குமாறு சிங்கப்பூர் போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கட்ட விசாரணையில், இந்த உள்ளடக்கங்கள் சீனாவைத் தளமாகக் கொண்ட ஒரு தளத்திலிருந்து உருவாகி பரப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

​இனவாதத்தையும், வெளிநாட்டவர் மீதான வெறுப்பையும் சிங்கப்பூர் கடுமையாக எதிர்ப்பதாக உள்துறை அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!