
கோலாலம்பூர், ஜூலை 29 – வழிதவறல் மற்றும் விபத்துகளைக் குறைத்து, தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளின் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மலை ஏற்ற நடவடிக்கைகளுக்கு இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு (NRES) கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
அதிக ஆபத்துள்ள மலைப் பகுதிகளில் *day hike* மற்றும் *compressed hike* நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் முன்னேற்பாடுகளின்றி, அனுமதியில்லாத பாதைகளில் பயணிப்பது வழிதவறல் சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக துணை அமைச்சர் சையத் இப்ராஹிம் சையத் நோ (Syed Ibrahim Syed Noh) தெரிவித்தார்.
ஆபத்தான 189 மலையேற்றப் பகுதிகளில் சான்றளிக்கப்பட்ட மலை வழிகாட்டிகளை (MGP) கட்டாயமாக நியமித்துள்ளதுடன், உடல்நிலை பரிசோதனை, காப்புறுதி மற்றும் GPS கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.



