
கோலாலம்பூர், செப்டம்பர் 24 – சுபாங் அருகே கூட்டரசு நெடுஞ்சாலையின் மோட்டார் சைக்கிள் பாதையில், மழையால் ஈரமான பச்சை நிறம் பூசப்பட்ட பகுதியில் பல மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து விழுந்ததாகக் காட்டும் 42 விநாடி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அதே இடத்தில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் நடந்ததாக காணொளியுடன் வெளியான பதிவில் கூறப்பட்டுள்ளது. எனினும், சம்பவம் நடந்த சரியான தேதி, ஓட்டுநர்களின் நிலை மற்றும் பச்சை நிறச் சாலைப் பகுதியே விபத்துக்குக் காரணமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம், வளைவுகள் மற்றும் வெளியேறும் பாதைகள் போன்ற ஆபத்தான பகுதிகளை அடையாளப்படுத்தவும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கூடுதல் கவனத்துடன் செல்லுமாறு எச்சரிக்கவும் இந்தப் பச்சை நிறச் சாலைப் பூச்சு அமைக்கப்பட்டதாக பொதுப்பணித் துறை தெரிவித்திருந்தது.



