Latestமலேசியா

மாணவர்கள் மதுபானம் பரிமாறியக் குற்றச்சாட்டு; நெகிரி செம்பிலான் கல்வி இலாகா விசாரணை

சிரம்பான், அக்டோபர்-25,நெகிரி செம்பிலானில், பள்ளி மாணவர்கள் மதுபானம் பரிமாறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில், மாநிலக் கல்வி இலாகா விசாரணை நடத்தி வருகிறது.

செப்டம்பர் 5-ஆம் தேதி, சிரம்பானில் உள்ள SMK St. Paul இடைநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த இரவு விருந்து நிகழ்ச்சியில், மாணவர்கள் மதுபானம் பரிமாறியதாகக் கூறப்படுகிறது.

என்றாலும், அந்த நிகழ்ச்சி பள்ளி வளாகத்திற்கு வெளியே நடைபெற்றதாகவும், மாணவர்கள் மதுபானம் பரிமாறியதாகக் கூறப்படுவதைப் பள்ளி நிர்வாகமும் முன்னாள் மாணவர் சங்கமும் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்குற்றச்சாட்டைக் கடுமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட கல்வி இலாகா, பள்ளி மாணவர்களை மதுபானம் கையாளும் அல்லது பரிமாறும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக்கூடாது என வலியுறுத்தியது.

புகார் தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், விதிமீறல் அல்லது அலட்சியம் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!