Latestமலேசியா

மார்ச் 24-30 வரைக்கும் 2,579 டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள்; மூவர் மரணம்

புத்ரா ஜெயா, ஏப்ரல் 6 – மார்ச் 24 முதல் 30 வரைக்குமான ஒரு வாரக் காலக்கட்டத்தில் மட்டும் நாட்டில் 2,579 டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முந்தைய வாரத்தில் பதிவான 3,041 சம்பவங்களை விட அது குறைவு தான் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் Datuk Dr. Muhammad Radzi Abu Hassan தெரிவித்தார்.

அந்த ஒரு வாரத்தில் மூவர் டெங்கிக் காய்ச்சலுக்குப் பலியாகினர்.

இவ்வேளையில் இவ்வாண்டின் முதல் 13 வாரங்களில் பதிவான டெங்கிக் காய்ச்சல் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை, 44,144 ஆகும்.
கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் அவ்வெண்ணிக்கை 28,587-ழாக மட்டுமே பதிவாகியிருந்தது.

அதே போல் டெங்கி மரண எண்ணிக்கையும் அக்காலக்கட்டத்தில் கணிசமாகக் கூடியிருக்கிறது.

அதாவது, 2023-ன் முதல் 3 மாதங்களில் 18 பேர் மரணமடைந்த நிலையில் இவ்வாண்டு இதுவரையில் மட்டுமே 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கி அதிகம் பரவும் Hotspots இடங்களாக 135 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் கோலாலம்பூரில் மட்டுமே 114 இடங்கள் இருப்பதாக Datuk Dr Muhammad Radzi சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!