Latestமலேசியா

மீரியில் ஒற்றுமை வாரம் 2026; கலாச்சாரங்களும் சமூகத் தொடர்பும் இணையும் மேடை – இன்றும் நாளையும்

கூச்சிங், மே-9-தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் சரவாக்கில் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு ஒற்றுமை வாரம் கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில், மீரி நகரின் Boulevard Mall பேரங்காடியில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை, பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களை கவரவிருக்கின்றன.

‘ரூமா காமி’ கண்காட்சி, பல்லின கலை நிகழ்ச்சிகள், nopeng மற்றும் bertandak போட்டிகள், ‘FoodUnites’ உணவுக் கண்காட்சி ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாகும்.

எனவே, மீரி மக்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொண்டு, கலாச்சார பன்முகத்தை அனுபவித்து, ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்துமாறு அழைக்கப்படுகிறார்கள்.

இது மலேசியா மடானி கொள்கையைப் பிரதிபலிக்கும் ஒரு சமூக எழுச்சி விழாவாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!