Latestமலேசியா

முதலாம் வகுப்பு மாணவர்களுக்காக 2,102 கூடுதல் வகுப்பறைகள்; RM808 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – 2027ஆம் கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிக்க, நாடு முழுவதும் 2,102 கூடுதல் வகுப்பறைகளை அமைக்க அரசாங்கம் 808 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

இதற்காக மொத்தம் 681 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவானில் 1,780 வகுப்பறைகள், சரவாக்கில் 210 வகுப்பறைகள், சபாவில் 112 வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளன.

இவற்றில் வழக்கமான கல்விக்கான வகுப்பறைகளுடன், ஒருங்கிணைந்த சிறப்புக் கல்வித் திட்டத்திற்கான (PPKI) வகுப்பறைகளும் உள்ளடங்கும்.

பெரும்பாலான திட்டங்கள் 2026 டிசம்பருக்குள் கட்டம் கட்டமாக முடிக்கப்படும். இதன் மூலம் 2027ஆம் கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் சேரும் கூடுதல் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறை வசதிகள் தயாராக இருக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!