Latestமலேசியா

முதல் Matriks மதிப்பீடு இன்று தொடக்கம்: நாடு முழுவதும் 400,000-க்கும் மேற்பட்ட நான்காம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்பு

கோலாலம்பூர், அக்டோபர் 6 – நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் நான்காம் ஆண்டு மாணவர்கள் இன்று முதல் முதன்முறையாக நடைபெறும் நான்காம் ஆண்டு கற்றல் அதாவது Matriks மதிப்பீட்டில் பங்கேற்கின்றனர்.

இந்த மதிப்பீட்டில் மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களும், தேசிய வகை சீன மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீன அல்லது தமிழ் மொழிப் பாடமும் இடம்பெறுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் 1 மணி 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

மாணவர்களின் அறிவு, சிந்தனை, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் மற்றும் கற்றவற்றைப் பயன்படுத்தும் திறன் ஆகியவை மதிப்பிடப்படும். கேள்வித்தாள்கள் கல்வி அமைச்சின் தேர்வு வாரியத்தால் தயாரிக்கப்பட்டு, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றன.

மாணவர்களின் விடைத்தாள்களை அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களே மதிப்பீடு செய்வார்கள். இதன் முடிவுகள் சிறப்புப் பள்ளிகள் அல்லது உறைவிடப் பள்ளிகளில் சேர்வதற்கான தகுதியாக பயன்படுத்தப்படாது. இந்த மதிப்பீடு அக்டோபர் 6 முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!