Latestஉலகம்

மெக்சிகோவில் செல்ஃபி மோகத்தால் ரயில் மோதி நொடியில் பறிபோன இளம் பெண்ணின் உயிர்

மெக்சிகோ, ஜூன்-9 – தென்னமரிக்க நாடான மெக்சிகோவில் பழங்காலத்து ரயிலின் முன் செல்ஃபி எடுக்க முயன்ற இளம் தாய், ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

1930-ல் உருவாக்கப்பட்ட அந்த நீராவி இயந்திர ரயில் கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிக்கோவைச் சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது.

அவ்வகையில் Empress என்ற பெயர் கொண்ட அந்த ரயில், மெக்சிகோவில் நுழையும் போது Hidalgo நகர் வாழ் மக்கள் பலரும் புகைப்படம் எடுப்பதற்காகக் கூடினர்.

அப்போது, தன் மகன் மற்றும் அருகில் உள்ள பள்ளிப் பிள்ளைகளுடன் 20 வயது இளம் பெண்ணும் வந்திருந்தார்.

ரயில் நெருங்கி வரும் போது தண்டவாளம் அருகே சென்றவர், செல்ஃபி எடுப்பதற்காக கைப்பேசியுடன் முட்டிப் போட்டு அமர்ந்தார்.

அப்போது வேகமாக வந்த ரயிலின் இயந்திரப் பகுதி அப்பெண்ணின் தலையில் மோதி, அவர் சுருண்டு விழுந்து அங்கேயே உயிரிழந்தார்.

பதறிப் போன அருகில் இருந்த பையனொருவன் அப்பெண்ணை இழுத்து உதவிக்குக் கூச்சலிடுவதும், அந்த சூழ்நிலையிலும் இன்னொரு பெண் கைப்பேசியுடன் அவரை வீடியோ எடுக்க வருவதோடும் காணொலி காட்சி முடிகிறது.

செல்ஃபி மோகத்தால் நொடிப்பொழுதில் உயிர் போன அச்சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!